பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 2 நாள் போலீஸ் காவல்
பெங்களூரு: சிறையில் மொபைல் போன் பயன்படுத்திய வழக்கில், முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை, இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹாசன் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 35. பலாத்கார வழக்குகளில் கை து செய்யப்பட்ட இவருக்கு, ஒரு வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை விதித்து, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி சிறையில், சி.சி.பி., போலீசார் நடத்திய சோதனையில், பிரஜ்வல் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டது. அதை பிரஜ்வலும், சக கைதி பிரதாப் ராயும் பயன்படுத்தியது தெரிந்தது.






