சூடானில் தங்கச்சுரங்கம் சரிந்து விழுந்தது; 60 பேர் பலி
கார்த்தூம்: ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் சரிந்து 60 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு கோர்டோபனில் உள்ள எல்-நஹூத் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா என்ற தங்கச் சுரங்கம் நேற்று சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு முழுவதும் சக தொழிலாளர்கள் தங்களிடம் இருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், பலர் மாயமாகியுள்ளனர். பாறைகளையும் மண்ணையும் அகற்றக் கனரக இயந்திரங்கள் தேவைப்படுவதாகத் தப்பியோடியவர்கள் தெரிவித்துள்ளனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)