டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை கல்பாவிருக் ஷா பயிலரங்கம் தொடக்கம்
சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், கண் மருத்துவ மாணவ – மாணவியருக்காக இரு நாள் பயிலரங்கம், மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் நேற்று தொடங்கியது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், கண் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், முதுநிலை கண் மருத்துவ மாணவர்களுக்காக, தொடர் மருத்துவ கல்வி பயிலரங்கமான, ‘கல்பவிருக் ஷா’ செயல்திட்டம், மயிலாப்பூரில் நேற்று தொடங்கியது.
பத்தொன்பதாம் ஆண்டாக, இரு நாள் தொடர் மருத்துவ கல்வி பயிலரங்கில், நாடு முழுதும் இருந்து, 300க்கும் மேற்பட்ட இளம் டாக்டர்கள் மற்றும் 30க்கும் அதிகமான பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


