சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சொத்து, தொழில் வரி செலுத்த வேண்டும்..!
சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினையும், அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை ந
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினையும், அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களின் தொழில் வரியினையும் மாநகராட்சிக்கு 30.09.2026க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998ன் பிரிவு 117 - ன் படி, பணியாளர்களின் ஊதியத்திலிருந்து தொழில் வரியினை பிடித்தம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்துவது அந்நிறுவனங்களின் சட்டபூர்வ கடமையாகும். அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியினை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.


