சொத்துவரி வசூல் மையங்கள் விடுமுறை நாட்களிலும் இயங்கும்
சென்னை, செப். 18– சென்னையில் சொத்துவரி, தொழில்வரி போன்ற வரி செலுத்துபவரின் சிரமத்தை குறைக்கும் வகையில்,
சென்னையில் சொத்துவரி, தொழில்வரி போன்ற வரி செலுத்துபவரின் சிரமத்தை குறைக்கும் வகையில், விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளிலும் வசூல் மையங்கள் இயங்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை தொழில்வரி செலுத்துவது கடமையாகும்.
அதேபோல், சொத்து உரிமையாளர்களும் வரி செலுத்த வேண்டும். இதில், சொத்து உரிமையாளர்கள் வரும், 30ம் தேதிக்குள் நிலுவையின்றி வரி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தனி வட்டி விதிக்கப்படும்.
வரி செலுத்துவோரின் சிரமத்தை குறைக்கும் வகையில், சொத்துவரி, தொழில் வரி ஆகியவை செலுத்துவதற்கு ஏதுவாக, 19, 20, 26, 27 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் மையங்கள் செயல்படும். மேலும் விபரங்களுக்கு, 044 – 2561 9305 என்ற போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
