பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை சாத்தியமில்லை என அதிகாரி கைவிரிப்பு
திருவாலங்காடு, செப். 7– திருவள்ளூர் பழைய பேருந்து நிலையம் வரை, மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என, மாணவ –
திருவள்ளூர் பழைய பேருந்து நிலையம் வரை, மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என, மாணவ – மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ‘அதற்கு சாத்தியமில்லை’ என, போக்குவரத்து துறை அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.
திருவள்ளூர் பேருந்து பணிமனையில் இருந்து ,அரக்கோணம் வரை, அரசு பேருந்து தடம் எண்: ‘105சி, 212எப்’ மற்றும் தக்கோலம் வரை ‘டி-2’ உள்ளிட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், ‘105சி’ காலை 7:50 மணிக்கும், ‘டி-2’ பேருந்து 8:00 மணிக்கும், திருவாலங்காடில் இருந்து திருவள்ளூருக்கு செல்கின்றன.
