`வாய்திறக்காமல் இருங்க' - விளாசிய திமுக; கொந்தளித்த திருமா டு வசூலில் இறங்கிய தவெக MLA
‘நீங்கள் பேசினாலே சர்ச்சையாகிவிடுகிறது. எனவே தலைமை சொல்லாமல் வாய்திறக்க வேண்டாம்’ என மகாகவி புள்ளிக்கு டோஸ் விழுந்ததாம். கடுப்பான மகாகவி பிரமுகர், ‘உங்களுக்கெல்லாம் பேசச் சொல்லிக் கொடுத்ததே நான்தான்’ என முணுமுணுத்துபடி வருந்தினாராம்!
“கொளத்தூர் தொகுதியில் த.வெ.க எம்.எல்.ஏ வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகியிருப்பது, கட்சிக்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. ‘இதுபோன்ற வழக்குகளெல்லாம் நிற்காது என்று தெரிந்திருந்தும் தலைவர் பெயரிலேயே இப்படியொரு சோதனை முயற்சியை மேற்கொண்டு, மீண்டும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளது கட்சியின் சட்டத்துறை’ என்று உடன்பிறப்புகள் கொதித்துவிட்டார்களாம்.
‘கொளத்தூர் தோல்வியைச் சரிக்கட்டுவதாக நினைத்துக்கொண்டு இனி நீங்கள் எதுவும் செய்யவேண்டாம்’ என கட்சியின் சட்டத்துறை உச்சப்புள்ளியிடமும் அந்த முன்னாள் மாண்புமிகுவையும் கடுமையாக எச்சரித்தார்களாம் குடும்ப புள்ளிகள்.





