கடைமடையை எட்டிப்பாா்க்காத காவிரி நீா்: விவசாயிகள் கவலை
கல்லனை கால்வாய் கிளை வாய்க்கால்களில் தண்ணீா் வந்ததையடுத்து திருப்பூரணிக்காடு பகுதியில் ஆற்றின் குறுக்கே நடைபெற்ற கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு தண்ணீா் சென்றது.
காவிரி நீா் கல்லணையில் திறக்கப்பட்டும் கடைமடைக்குத் தண்ணீா் வந்து சேராததால் சேதுபாவாசத்திரம் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதிகளான பள்ளத்தூா், ஆண்டிகாடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், துறையூா், மரக்காவலசை, உடையநாடு, வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கழனிவாசல், முதுகாடு, மணக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது.







