Politics
கடைமடை வந்தது காவிரி நீர் விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை: காவிரியில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், மயிலாடுதுறை கடைமடை அணைக்கு வந்து சேர்ந்தது.
சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர், அங்கிருந்து காவிரி பாசன பகுதிக்கு கடந்த 6ம் தேதி திறக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு பிறகு, பூம்புகாரில் கடலுடன் கலக்கும் இடத்திற்கு முன்னதாக உள்ள மேலையூர் கதவணையை காவிரி நீர் நேற்று வந்தடைந்தது. காவிரி குறுக்கே அமைந்துள்ள கடைசி கதவணை இது. இது மேட்டூரில் இருந்து 120 கி.மீ., தொலைவில் உள்ள கடைசி கதவணை.
அணையில் 7.5 அடி வரை நீரை தேக்க முடியும். ஆனால், 2 அடிக்கு மட்டுமே நீர் சேர்ந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள 3,016 ஏக்கர் பாசன பரப்புக்கு போதாது என, தெரிவித்துள்ள விவசாயிகள், போதிய தண்ணீர் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 100 நாட்களுக்கு தண்ணீர் வந்தால் தான் சம்பா பயிரை சாகுபடி செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.