மோகன்லால் - விஷ்ணு மோகன் கூட்டணியில் புதிய படம்.. டைட்டில் வெளியானது
சென்னை,தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள புதிய படத்திற்கு "ஆப்ரேஷன் கங்கா" (Operation Ganga) என்ற டைட்டில் வைக்கப்பட்ட
தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள புதிய படத்திற்கு "ஆப்ரேஷன் கங்கா" (Operation Ganga) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘L367’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு மோகன், உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘மேப்பாடியான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து ‘கத இன்னுவரே’ திரைப்படத்தை இயக்கிய அவர், தற்போது மோகன்லாலை வைத்து ‘L367’ படத்தை இயக்குகிறார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

