குழாய் இருந்தும் குடிநீர் வசதி இல்லை காஞ்சி ரயில் நிலையத்தில் பயணியர் ஏமாற்றம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குழாய் இருந்தும், குடிநீர் வசதி இல்லாததால், பயணியர் ஏமாற்றமடைகின்றனர்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.
பயணியரின் வசதிக்காக பழைய ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குழாயில் குடிநீர் வருவதில்லை. இதனால், தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பயணியர், குழாயை திறந்து குடிநீர் வராதததால், ஏமாற்றமடைகின்றனர்.



