குழாய் இருந்தும் குடிநீர் வசதி இல்லை காஞ்சி ரயில் நிலையத்தில் பயணியர் ஏமாற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குழாய் இருந்தும், குடிநீர் வசதி இல்லாததால், பயணியர் ஏமாற்றமடைகின்றனர்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.
பயணியரின் வசதிக்காக பழைய ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குழாயில் குடிநீர் வருவதில்லை. இதனால், தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பயணியர், குழாயை திறந்து குடிநீர் வராதததால், ஏமாற்றமடைகின்றனர்.
இதனால், பழைய ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர் தங்களது தாகத்தை தீர்க்க முடியாத நிலை உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில், குழாயில் தடையின்றி குடிநீர் வசதி ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில், குடிநீர் வரவில்லை என, எந்தவித புகாரும் இதுவரை வரவில்லை. இருப்பினும், இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.