Arts, culture, entertainment and media
அண்ணாதுரை பிறந்தநாள் விழா: அரசியல் கட்சிகள் மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஒதியஞ்சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் சிவக்கொழுந்து மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.: தி.மு.க., சார்பில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நிர்வாகிகள் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவைத் தலைவர் சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் சேதுசெல்வம், துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாநில துணை அமைப்பாளர் குமார் தலைமையில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், இளம்பரிதி, பழனி, தொகுதி செயலாளர்கள் திராவிடமணி, சக்திவேல், பார்த்திபன், கலைவாணன், ராமலிங்கம் உடனிருந்தனர்.
அதே போல், அ.தி.மு.க., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.