Arts, culture, entertainment and media
முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
பெரியகுளம், செப். 16- முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளம் பழைய பஸ் ஸ்டாண்டில்
முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
த.வெ.க., சார்பில் நகர செயலாளர் தினேஷ் தலைமை வகித்தார். வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக்அலி முன்னிலை வகித்தார். சபரி ஐங்கரன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர நிர்வாகிகள் வாஷித், இம்ரான், மதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தி.மு.க., சார்பில் நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணக்குமார் மாலை அணிவித்தார். நகராட்சி தலைவர் சுமிதா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் மாலை அணிவித்தார். மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர்கள் செல்லமுத்து, ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பெரிய வீரன், ஒன்றிய செயலாளர்கள் அப்பாஸ் மைதீன், பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


