Arts, culture, entertainment and media
Solomon Pappaiah | சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை… என்ன தெரியுமா?

தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார். அவரது நிறைவேறாத ஆசை குறித்து உதவியாளர் பேசியிருக்கிறார்.
தமிழ் பேராசிரியரும், பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் மறைந்த இதே நாளில் பேராசிரியர் சாலமன் பாப்பையா உயிரிழந்துள்ளார். மேலும், பாரதி குறித்த நிறைவேறாத கடைசி ஆசை ஒன்றும் பாப்பையாவுக்கு இருந்திருக்கிறது. அது தொடர்பான அவரது உதவியாளர் பேசியுள்ளார்.
சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை குறித்து உதவியாளர் ராஜா கூறும்போது, “பேராசிரியர் சாலமன் பாப்பையா 1965-ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு வயது 91. மூன்று நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்கு பட்டிமன்றம் நடந்தது. அதற்காக சிவகாசிக்கு சென்று வந்தோம். நன்றாக இருந்தார்.
நேற்று இரவு தூக்கம் வராமல் இருந்தார். இன்று காலை மூச்சு விட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போலோவுக்கு அழைத்துச் செல்ல சொன்னார்கள். அங்கு சென்றோம். ஐசியூவில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் சாலமன் பாப்பையா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பாப்பையா கிறிஸ்தவராக பிறந்திருந்தாலும், சாதி, மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்ததால், தன்னுடைய உடலை இந்திய சட்ட முறைப்படி தகனம் செய்ய வேண்டுமென உயில் எழுதி வைத்துள்ளார். அதன்படியே அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. நாளை உடல் தகனம் செய்யப்பட்ட உள்ளது. சாலமன் பாப்பையா பிறந்து வளர்ந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.
பாரதியார் குறித்து ஒரு நூல் எழுதி கொண்டிருந்தார். அதை எப்படியாவது முடித்து வெளியிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தார். அது தான் அவருடைய கடைசி ஆசை. பாரதி வரலாற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்தார். அது நிறைவேறும் முன்பே காலமாகிவிட்டார். அரசு மரியாதை அடக்கம் செய்து தொடர்பாக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
