Arts, culture, entertainment and media
Solomon Pappaiah | சாலமன் பாப்பையா காலமானார்.. பொதுமக்கள் அதிர்ச்சி.!

Solomon pappaiah | 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர் சாலமன் பாப்பையா.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. இவரின் இழப்பு பலருக்கும் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சாத்தான்குடியை சேர்ந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். 2000-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றிருந்தார்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி ஜெயபாய் (86). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு இவரது மனைவி காலமானார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருந்தார்.
பல பட்டிமன்றங்களில் பேசி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார். பட்டிமன்றம் என்றாலே பாப்பையா தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு தனது பேச்சாற்றால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்திருந்தார். கொஞ்சி கொஞ்சி இனிய தமிழில் நகைச்சுவையாக பட்டிமன்றத்தை வழிநடத்தக்கூடியவர். அமெரிக்கா, ஆஸி., உள்ளிட்ட வெளிநாடுகளில் பல்லாயிரம் பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார்.
எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், பதிப்பாசிரியர், தமிழ் பேராசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை காமெடி வசனம் பேசி நடித்து மிகவும் பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து பாய்ஸ், முதல்வர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
