மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்: மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சுந்தரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி உலகமாதா, 59; இவரை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.