பெண் மாயம்
விழுப்புரம்: தாய் வீட்டிலிருந்து மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்,25; கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருத்திகா, 21; இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு, கிருத்திகா, விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற கிருத்திகா மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.