Arts, culture, entertainment and media
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் கௌரவ உறுப்பினராக இணைந்த லெஜண்ட் சரவணன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அதில் கௌரவ உறுப்பினராக லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் அருள் சரவணன். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் ‘லீடர்’. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் துரை செந்தில்குமார் உடன் இணைந்து லெஜண்ட் சரவணன் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திரைத்துறையில் பயணித்து வரும் லெஜண்ட் சரவணன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்தில் கௌரவ உறுப்பினராக இணைந்துள்ளார். சங்கத்தின் தலைவர் சேரன் முன்னிலையில் இணைந்தார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கௌரவ உறுப்பினராக இணைந்தார் லெஜண்ட் சரவணன்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, அகில இந்திய லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், திறமைசாலிகளையும் லெஜண்ட் சரவணன்… pic.twitter.com/sbJFHzE7gN
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, அகில இந்திய லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், திறமைசாலிகளையும் லெஜண்ட் சரவணன் நேரில் சந்தித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
AI-ல் ஒரு வீடியோ உருவாக்க.. எவ்வளவு தண்ணீர் செலவாகும் தெரியுமா?
AI இயங்குவதற்கு ஆயிரக்கணக்கான பிரத்யேக Chips 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.
இவை மிகக் குறுகிய காலத்தில் கடுமையான வெப்பத்தை வெளியிடும்.
அந்த வெப்பம் எவ்வளவு? எவ்வளவு தண்ணீர் செலவாகும் அதற்கு?
