Arts, culture, entertainment and media
எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த லெஜண்ட் சரவணன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 3 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026 முதல் 2029 காலத்திற்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் நடைபெறவிருந்தது. ஆனால், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் திடீரென மறைந்ததால் அந்த தேர்தல் அம்மாதம் மத்தியில் நடந்தது. இதில் சேரன் அணியான ‘நம்ம பாக்யராஜ்’ வெற்றி பெற்றது. இதையடுத்து தலைவராக சேரன், பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வெற்றி பெற்ற நிர்வாவிகள் புதியதாக பொறுப்பேற்று சங்கத்தை வழி நடத்தி வருகின்றனர்.
இந்த புதிய நிர்வாகிகள் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர். சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் அவரிடம் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து ரஜினிகாந்தை சந்தித்த நிர்வாகிகள் சங்கத்தில் இணையுமாறு கோரிக்கை வைத்தனர். இதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணனை சந்தித்தனர். அப்போது அவரையும் சங்கத்தில் இணைய கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற லெஜண்ட் சரவணன் கௌரவ உறுப்பினராக இணைந்துள்ளார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிலிருந்து , அகில இந்திய லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களையும் நேரில் சந்தித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)