Religion
இன்று இனிதாக ... (05.09.2026) திருப்பூர்
n ஆன்மிகம் n ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி n பிருந்தாவன கண்ணனாக பெருமாள் புறப்பாடு மற்றும் உறியடி திருவிழா, திருப்பூர் திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை 6:45 மணி.
n சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு, குருவாயூரப்பன் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை 6:30 மணி.
n ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர். ஸ்ரீ கண்ணபிரான் உற்சவ மூர்த்திகள் திரு ஆராதனம். மாலை 6:00 மணி. உறியடி, வழுக்குமரம் மற்றும் திருவிளையாடல் - இரவு, 7:00 மணி. திருவீதியுலா மற்றும் மங்கள ஆரத்தி இரவு 8:00 மணி.
சிறப்பு பஜனை ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், அவிநாசி. பங்கேற்பு - சோழீஸ்வரர் பஜனைக்குழு, பெருந்துறை ராஜூ குழு. மாலை 6:30 மணி.
ஸ்ரீசத்ய சாய் பிரேம ரதம் பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் பிரேம ரத திருப்பூர் வருகை. வரவேற்பு வழங்கும் இடம்: வி.ஏ.டி. பள்ளி காலை 9:00 மணி. சிறப்பு பஜன் மற்றும் வழிபாடு. ஏற்பாடு - ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம்.
n பொது n பேரவைக் கூட்டம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க 7வது கோட்ட பேரவை கூட்டம், லயன்ஸ் கிளப் அரங்கம், குமரன் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: கோட்ட தலைவர் கருப்பன், மாநில தலைவர் பாலசுப்ரமணியம், மாநில செயலாளர் திருப்பதிராஜ். காலை 10:00 மணி.
திறப்பு விழா அறிவுச்சுடர் கலையரங்கம் திறப்பு விழா, ஆசிரியர் தின விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள். புனிததோமையர் கல்வி நிறுவனங்கள், முத்துச்செட்டிபாளையம், அவிநாசி.பங்கேற்பு: திருப்புக்கொளியூராதினம் காமாட்சிதாச சுவாமிகள், வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா. காலை 9:30 மணி.
கருத்தரங்கம் வ.உ.சி. நினைவு கருத்தரங்கம், சந்திர மஹால், அரசு பெண்கள் பள்ளி அருகில், அவிநாசி. ஏற்பாடு: த.மு.எ.க.ச., அவிநாசி. மாலை, 5:00 மணி.
n விளையாட்டு n தடகள திருவிழா எட்டாவது, திருப்பூர் மாவட்ட ஜூனியர் தடகள திருவிழா. எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு மைதானம், சிக்கண்ணா கல்லுாரி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட தடகள அசோசியேசன். காலை 8:00 மணி.



