Religion
கோயில்களில் கும்பாபிஷேகம்
வடமதுரை, செப்.18- வடமதுரை பிலாத்து அருகே பி.கம்பிளியம்பட்டி உப்புக்குளத்தில் மாட்டுக்கார முத்தாலம்மன்
வடமதுரை பிலாத்து அருகே பி.கம்பிளியம்பட்டி உப்புக்குளத்தில் மாட்டுக்கார முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். வேடசந்துார் எம்.எல்.ஏ., வீரா சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
கள்ளிமந்தையம்: கொத்தயத்தில் ஆறுமுகத்தம்மன், விநாயகர், கருப்புசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், புண்ணிய தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
நேற்று ஆறுமுகத்தம்மன், விநாயகர், கருப்புசாமி தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



