Religion
கோயில்களில் கும்பாபிஷேகம்
நத்தம், செப்.17- நத்தம் அருகே புதுப்பட்டி- குட்டூர் முத்தாலம்மன், உசாமரத்து கருப்புசாமி, ஆகாசவீரன்,
நத்தம் அருகே புதுப்பட்டி- குட்டூர் முத்தாலம்மன், உசாமரத்து கருப்புசாமி, ஆகாசவீரன், வேட்டைக்காரன், கரந்தமலையான் கோயில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைத்து நேற்று முன்தினம் கணபதி ஹோமம், தனபூஜை, மஹாலட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், புனித தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க புறப்பாடுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.