Religion
கும்பாபிஷேகம்
சாயல்குடி: சாயல்குடி அருகே மேலச்செல்வனுார் செல்வமுனீஸ்வரர், காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை கடம் புறப்பட்டு கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
பின் மூலவர்களுக்கு 11 வகை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் குலதெய்வ குடிமக்கள் செய்திருந்தனர்.