கனரக வாகனம் கால்வாயில் இறங்கியதால் பாதிப்பு

அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில் குறுகிய சாலையில் கனரக வாகனம் சென்றதால், கழிவுநீர் கால்வாயில் இறங்கியது.
நகராட்சிக்கு உட்பட்ட, குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள்
மிகவும் குறுகலாக உள்ளன. இந்த சாலையில் பஸ்களோ, லாரிகளோ செல்வது
சிரமம். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்கள்
தொடர்ந்து வந்து செல்வதால், சாலைகள் சேதமடைவதுடன், பொதுமக்கள், பள்ளி
குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் ஷாநகர்
பகுதியில், நேற்று சரக்கு வாகனம் ஒன்று குறுகிய சாலையில், நுழைய
முடியாமல் கழிவு நீர் கால்வாயில் இறங்கியது. இதனால் நேற்று, நாள்
முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொண்டு, குடியிருப்பு சாலைகளில் கனரக வாகனங்கள் நுழைவதை உடனடியாக
தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.