கேரளாவில் இருந்து கழிவு ஏற்றி வந்த வேனுக்கு அபராதம்
பவானி:அம்மாபேட்டை அருகே குதிரைக்கல் மேடு விநாயகர் கோயில் தோட்டத்தில் உள்ள கரும்பு ஆலைக்கு, கேரளாவில்
அருகே குதிரைக்கல் மேடு விநாயகர் கோயில் தோட்டத்தில் உள்ள கரும்பு
ஆலைக்கு, கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவு கொண்டு வருவதாக
அம்மாபேட்டை வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
துறையினர் ஒரு ஈச்சர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். கேரள மாநிலம்
வயநாடு பகுதியில் இருந்து கழிவு கொண்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
குதிரைக்கல் மேடு சேகரின் கரும்பு ஆலைக்கு, குண்டு வெல்லம் தயாரிக்கும்
கிரஷர் அடுப்பு எரிக்க கொண்டு வந்தது தெரியவந்தது. மாணிக்கம்பாளையம்
பஞ்., அலுவலகத்தில் வேனை ஒப்படைத்தனர். டிரைவருக்கு, 35 ஆயிரம்
ரூபாய் அபராதம் விதித்தனர்.