Arts, culture, entertainment and media
விபத்தில் சிக்கியவர்களை மீட்ட வேளாண் அமைச்சர்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், படுகாயமடைந்த இருவரை, வேளாண்துறை அமைச்சர் வினோத் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் வினோத் காரில் சென்றார். அப்போது, கும்பகோணம், வளையப்பேட்டை பைபாஸ் சாலையில், சுவாமிமலை காமராஜர் நகரை சேர்ந்த குமரன், 55, தாராசுரம் மிஷன் தெருவை சேர்ந்த கிருபானந்தம், 40, இருவரும் பைக்குகளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு படுகாயமடைந்தனர்.
ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்த அவர்களை, அமைச்சர் வினோத் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குமரன் உயிரிழந்தார். கிருபானந்தம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கும்பகோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.