அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்கர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11:15 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அர்ச்சனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது.
ஊஞ்சல் தாலாட்டின் போது கோவில் பூசாரிகளும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர்.
பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். இரவு 12:10 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.
எஸ்.பி. மதிவாணன், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷ்னர் சிவலிங்கம், உதவி கமிஷ்னர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, நடைமுறை அறங்காவலர் பச்சையப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை, கடலுார்,வேலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.