Politics
ரீல்ஸ் போட்டு டார்ச்சர் பண்றாங்க வேலுார் கவுன்சிலர்கள் புலம்பல்

வேலுார்: 'வேலுார் மாநகராட்சி பகுதிகளில், த.வெ.க.,வினர் ரீல்ஸ் போட்டு டார்ச்சர் பண்றாங்க' என, மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., -- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புலம்பி தவித்தனர்.
வேலுார் மாநகராட்சி கூட்டம், தி.மு.க., மேயர் சுஜாதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., -- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:
எங்கள் வார்டுகளில், அண்மையில் பழுதடைந்த மோட்டாரை, ஆளுங்கட்சியினர் கழற்றி சென்றுவிட்டனர். த.வெ.க.,வினர் என்றால் மோட்டாரை கழற்றலாமா? மாநகராட்சி பகுதிகளில் பராமரிப்பு, வளர்ச்சி பணிகளை கவுன்சிலர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.
காட்பாடி, வேலுார் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், த.வெ.க., -- எம்.எல்.ஏ.,க்கள், கட்சிக்காரர்கள் ரீல்ஸ் போட்டு டார்ச்சர் பண்றாங்க... கழிவுநீர் கால்வாய்களை ஆய்வு செய்து ரீல்ஸ் போடுகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்களை முறையாக அ ழைப்பதில்லை.
வேலுார் த.வெ.க., -- எம்.எல்.ஏ., பக்கத்து தொகுதியான அணைக்கட்டுக்கு சென்று ரீல்ஸ் போடுகிறார். மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி த.வெ.க.,வினர் பேனர் வைக்கின்றனர். எங்கள் பேச்சை கேட்காத அதிகாரிகள், த.வெ.க.,வினர் சொல்லும் வேலைகளை செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.