Economy, business and finance
பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த சீனிவாசன் மனைவி வினிதா, 24. நேற்று முன்தினம் இரவு, வினிதா வீட்டிற்கு வந்த மர்ம நபர், மயக்க மருந்து கலந்த துணியை வினிதா முகத்தில் வைத்து அழுத்தி, கை, கால்களை கட்டி போட்டுள்ளார்.
அவரது கழுத்திலிருந்த, 12 சவரன் நகை, வீட்டிலிருந்த, 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினார். அரை மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சீனிவாசன், மனைவி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கழுத்திலிருந்த நகையை பறித்ததில், வினிதாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.