Arts, culture, entertainment and media
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
பெரியகுளம், செப். 18- வடுகபட்டியில் பெரியகுளம் மேற்கு ஒன்றியம் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர்
வடுகபட்டியில் பெரியகுளம் மேற்கு ஒன்றியம் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் அப்பாஸ் மைதீன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் செயலாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன், தேனி நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், செய்தி தொடர்பாளர் மணிகண்டன், டாக்டர்கள் மல்லன், சுப ஸ்ரீ பேசினர்.