Arts, culture, entertainment and media
மத விழாவில் கவர்ச்சியா? - திஷா பதானி உடைக்கு எழுந்த எதிர்ப்பு!

சமீப காலமாக நடிகைகள் ஆடை குறித்தான சர்ச்சைகள் அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பாக இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக ஒரு தரப்பினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் 2023ல் பதான் படத்தில் தீபா படுகோன் அணிந்த காவி நிற பிகினி உடை, இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு க்ரித்தி சனோன் அணிந்த பிகினி உடை உள்ளிட்ட சம்பவங்கள் அடங்கும். இதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆடை சிக்கலில் பாலிவுட் நடிகை திஷா பதானி இணைந்துள்ளார்.
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சார்பில் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். அவர் சிவப்பு நிற உடையில் மேல் பகுதியில் பிகினி உடை போல் அணிந்திருந்தார். இது தற்போது ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அவர்கள் ஒரு மத நிகழ்விற்கு இப்படித்தான் கவர்ச்சியாக உடை அணிவதா என்றும் இந்த நிகழ்ச்சிக்கு இது பொருத்தமானது இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
இதில் ஒருவர் ‘க்ரித்தி சனோனை விமர்சித்தவர்களே இதையும் கொஞ்சம் பாருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் ‘நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கண்ணியமான உடைகளை அணிந்திருந்தனர். ஆனால் இவர் மட்டும் உடல் தெரியும் படி அணிந்திருந்தார்’ என்றுள்ளார். இன்னொருவர், ‘எந்தப் பண்டிகையாக இருந்தாலும், இவர் ஒரே மாதிரியான பிகினி உடை போல் தான் அணிகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நடிகையின் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. விரைவில் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)