Economy, business and finance
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை 24 மணி நேரத்தில் வாலிபர் கைது
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில், வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சீர்பாதநல்லுாரைச் சேர்ந்தவர் தண்டபாணி, 44; இவர் கடந்த 8ம் தேதி காலை வீட்டை பூட்டிக்கொண்டு, அதே பகுதியில் நடந்த 100 நாள் திட்ட வேலைக்கு சென்றார். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 14 சவரன் நகைகள், 280 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சவேரியார்பாளையத்தை சேர்ந்த சரவணன் மகள் கிருபாகிருஷ், 23; என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தரன். சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார்.