தொடர் விடுமுறை.. சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்.. இயற்கை அழகை கண்டு ரசிப்பு.!

இதமான காலநிலையை அனுபவித்ததுடன், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகையும் அவர்கள் கண்டு ரசித்தனர்.
விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதமான காலநிலையை அனுபவித்ததுடன், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகையும் அவர்கள் கண்டு ரசித்தனர்.
விடுமுறையை கழிக்க உதகைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குளு குளு சூழலை உற்சாகமாக அனுபவித்தனர். படகு இல்லத்திற்கு அவர்கள் படையெடுக்க, மழையில் நனைந்தபடி சவாரி செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனத்தை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சுற்றுலாப் பயணிகள் அரிச்சல்முனை கடலுக்கு நடந்தே சென்றனர். கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்திலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கடலில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசித்தனர்.
