கொடையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல்:குளு, குளு நகரான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கிருஷ்ண ஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை அமைந்ததால் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
அங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, செட்டியார் பூங்கா, வனச்சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். வானம் மேக மூட்டத்துடன் ரம்யமான சீதோஷ்ண நிலவியதை அனுபவித்தனர்.