போலீஸ் செய்திகள்
இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது போடி: மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி காலனி சத்யபிரபு 24. தினமும் மது
போடி: மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி காலனி சத்யபிரபு 24. தினமும் மது குடித்து விட்டு தெருவில் நின்று தகாத வார்த்தை பேசினார். இதனை அதே பகுதியை சேர்ந்த குமார் 25, கண்டித்தார். ஆத்திரமடைந்த சத்தியபிரபு குமாரை கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். காயம் அடைந்த குமார் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குமாரின் மனைவி அழகேஸ்வரி 23, புகாரில் போடி தாலுகா போலீசார் சத்தியபிரபுவை கைது செய்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெரு தங்கவேல் 35, வெங்காயவியாபாரி. இவர் தனியார் வங்கியில் ரூ. 70 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அவரிடம் வடகரை காயிதே மில்லத்நகர் ராஜசேகர் , இவரது நண்பர் முத்பா இணைந்து கடன் வாங்க நாங்கள் உதவி செய்தோம், வங்கி செலுத்தும் தொகையை தங்களிடம் வழங்க கூறினர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜசேகர், முஸ்தபா இணைந்து தங்கவேலை தாக்கினர். காயமடைந்த தங்கவேல் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது புகாரில் ராஜசேகர், முஸ்தபா மீது வடகரை போலீசார் வழக்கு பதிந்தனர். தனியார் வங்கியில் தங்கவேலின் தந்தை பழனியப்பனுக்கு கடன் வாங்கி கொடுத்ததாகவும், அதனை திருப்பி செலுத்தாததால் வங்கி நிர்வாகம் தங்களிடம் கேட்டனர். இதனை தங்கவேலிடம் கேட்ட போது தாக்கினார் என ராஜவேல் வழங்கிய புகாரில் தங்கவேல் மீதும் வழக்கு பதிந்து வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.--