Arts, culture, entertainment and media
மதுரையின் மண்ணோடு சாலமன் பாப்பையா நினைவு நிலைத்திருக்கும்! பழனிவேல் தியாகராஜன்

மதுரையின் மண்ணோடு சாலமன் பாப்பையா நினைவு நிலைத்திருக்கும் என பழனிவேல் தியாகராஜன் இரங்கல்
மதுரையின் மண்ணோடும் மக்களோடும் சாலமன் பாப்பையாவின் நினைவு என்றும் நிலைத்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் நேற்று காலமனார். அவருக்கு வயது 90. இன்று மதுரையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன.
உடல்நலக் குறைவால் சில நாள்களாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சாலமன் பாப்பையா, சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு ஏராளமான தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். தமிழக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கும் இரங்கலில், தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மதுரையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரும், எனது தந்தையார் காலம் முதலே எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவருமான ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள், நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் என்னை வேட்பாளராக முன்மொழிந்து, படிவத்தில் கையெழுத்திட்டவர்.
அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழார்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையின் மண்ணோடும், மக்களோடும், தமிழோடும் இவ்வாளுமையின் நினைவு என்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.