Arts, culture, entertainment and media
சாலமன் பாப்பையா மறைவு: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல்
சென்னை,சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்

தமிழ் மொழியின் சிறப்பையும்,இலக்கியத்தின் அழகையும் எளிமையான நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு. பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான நடுவர் பாணியால் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர்.
தமிழ் மொழிக்கும்,தமிழ் பேச்சுக் கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழக அரசின் 'கலைமாமணி' விருது மற்றும் மத்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருது பெற்ற அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கும்,கலை மற்றும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.