Politics
வ.உ.சி., பிறந்த நாள் விழா
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு காந்திநகர் வெள்ளாளர் பெருமக்கள் சங்கம் சார்பில் வ.உ.சி., பிறந்த நாள் விழா பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. தலைவர் ஜெயமாணிக்கம் தலைமையில் வ.உ.சி., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணைத்தலைவர் துரைப்பாண்டியன், செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் சக்திவேல், சங்க ஆலோசகர் சவுந்தரராஜன், முருகேசன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேடசந்துார்: வேடசந்துார் ஆத்துமேடு பகுதியில் வ.உ.சி., பேரவை நிர்வாகி முருகேசன் தலைமையில் வ.உ.சி., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ., வீரா.சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.