Politics
வ. உ. சி. பிறந்தநாள் விழா: கொண்டாட்டம்
கம்பம் செப் 6 சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. யின் பிறந்தநாள் விழா கம்பத்தில் கொண்டாடப்பட்டது. வேலப்பர்
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. யின் பிறந்தநாள் விழா கம்பத்தில் கொண்டாடப்பட்டது.
வேலப்பர் வேளாளர் சங்க கட்டடத்தில் உள்ள வ.உ.சி. யின் சிலைக்கு, வேளாளர் மத்திய சங்க தலைவர் முருகேசன், வேலப்பர் வேளாளர் சங்க தலைவர் காந்தவாசன், வ.உ.சி. வேளாளர் சங்க தலைவர் திருமலை சங்கர் , ஆதிசக்தி வேளாளர் சங்க தலைவர் முருகேசன், கம்ப ராயப்பெருமாள் வேளாளர் சங்க தலைவர் மணிகன்டன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தெற்கு தி.மு.க. செயலாளர் பால்பாண்டி ராஜா, நிர்வாகி சந்தன குமார் , யோகா ஆசிரியர்கள் ரவிராம், துரைராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். காந்திசிலை அருகில் அன்னதானம் நடந்தது.
காமயகவுண்டன்பட்டியில் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வேளாள சங்க கவுரவ தலைவர் குமரேசன், தலைவர் முத்துச்சடையன், ஒய்வூதியர் சங்க தலைவர் அரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்
சின்னமனூர் : சீப்பாலக்கோட்டை ரோட்டில் உள்ள வ. உ.சி. யின் சிலைக்கு வ. உ. சி. யின் பேரன் சிதம்பரம் பிள்ளை, எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா மற்றும் சின்னமனூர் அனைத்து வேளாளர் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். குருக்கள் பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது. உத்தமபாளையத்தில் வ.உ.சி. யின் சிலைக்கு சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.