Weather
கரூரில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: சாலைகளில் தென்படும் கானல் நீர்
கரூர்:கரூரில், கோடைக்காலத்தை போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், சாலைகளில் கானல் நீர்

கோடைக்காலத்தை போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால்,
சாலைகளில் கானல் நீர் தென்படுவதால், வாகன ஓட்டிகள்
அவதிப்படுகின்றனர்.
உச்சபட்ச காலமான அக்னி நட்சத்திர காலம் கடந்த, மே, 28ல் நிறைவு
பெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த
சில நாட்களாக அதிகபட்ச வெப்ப நிலை நிலவுகிறது. கடந்த, 2 முதல் நாளை
வரை, வேலுார், ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில்,
நான்கு டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என, சென்னை வானிலை மையம்
தெரிவித்திருந்தது. கரூரில் வெயிலின் தாக்கம், கடந்த இரண்டு
நாட்களாக, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில் உள்ளது. கரூரில்
நேற்று, 98 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இதனால், கரூர் நகரில்,
நேற்று பொதுமக்கள் குடையுடன், பாதுகாப்பாக உலா வந்தனர்.
நகரை சுற்றி, மதுரை, சேலம், திருச்சி, கோவை ஆகிய பகுதிகளுக்கு
நெடுஞ்சாலை செல்கிறது. அதில், உச்சபட்ச வெயில் காரணமாக, கானல் நீர்
ஆங்காங்கே தென்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், நேற்று
அவதிக்குள்ளாகினர்.