வெவ்வேறு இடங்களில் விபத்துகள் படுகாயம் அடைந்த 3 பேர் உயிரிழப்பு
மேட்டூர்: ஓமலுார், தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே வசிப்பவர் மகேந்திரன், 42. மேச்சேரி அடுத்த, 5வது மைலில், சில்லி கடை வைத்துள்ளார். இவரது மாமா, மேச்சேரி, கிழக்கு ஓலைப்பட்-டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராமு, 48. கடந்த, 2 மாலை, டி.வி.எஸ்., மொபட்டில், ராமு, மகேந்திரன், ஓமலுார் சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மகேந்திரன் ஓட்டினார். 5வது மைல் - தொளசம்பட்டி சாலையில், கண்ணம்மா கடை அருகே வந்தபோது, முன்புறம் சென்ற பைக் திடீரென நின்றது. அந்த பைக் மீது மோதாமல் இருக்க, மொபட்டை இடது பக்கம் திருப்பியபோது, முன்புறம் சென்ற பைக் மீது மோதியது. ராமுவுக்கு தலையிலும், மகேந்திர-னுக்கு நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. இதில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆம்புலன்ஸ் மோதல்
தாரமங்கலம் அருகே தொளசம்பட்டி, தாசன்காட்டு வளவை சேர்ந்த, கூலித்தொழிலாளி சண்முகம், 40. இவர், புதிதாக டியோ மொபட்டை எடுத்துக்கொண்டு, கடந்த ஆக., 17 மாலை, 4:00 மணிக்கு நங்கவள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஆம்னி தனியார் ஆம்புலன்ஸ் மோதி-யதில், தடுமாறி விழுந்த சண்முகத்துக்கு தலையில் பலத்த அடி-பட்டது. மக்கள், அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்-துவ
மனைக்கு அனுப்பினர். அங்கு அவர், நேற்று முன்தினம் உயிரி-ழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாரமங்கலம் நகதம்பிச்சனுாரை சேர்ந்தவர் சந்துரு, 30. சில ஆண்-டுக்கு முன் திருநங்கையாக மாறி லலிதா என பெயர் மாற்றி, தந்-தையுடன் வசித்தார். கடந்த ஜூலை, 20ல், தாரமங்கலம் அண்-ணாசிலை அருகே சென்றபோது, நங்கவள்ளி பக்கமிருந்து வந்த ஸ்பிளண்டர் பைக் மோதியதில், லலிதா படுகாயம் அடைந்தார்.
மனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு, சூர-மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசா-ரிக்கின்றனர்.