Religion
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
செப். 6கோயில் * கும்பாபிஷேகம் -- இறை அனுமதி பெறுதல், : மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சித்தி விநாயகர்
* கும்பாபிஷேகம் -- இறை அனுமதி பெறுதல், : மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சித்தி விநாயகர் சன்னதியில் மஹா கணபதி ஹோமம், காலை 7:00 முதல் 11:00 மணி வரை, வீரவசந்தராயர் மண்டபத்தில் மங்கள வாத்தியம், திருமுறை விண்ணப்பம், மாலை 6:05 முதல் இரவு 8:30 மணி வரை.
* சர்ச் பெருவிழா: செயின்ட் மேரிஸ் சர்ச், கீழவாசல், மதுரை, தலைமை: திருச்சி லுார்ன்னை சர்ச் பாதிரியார் அருள், குழந்தைகள் தின சிறப்பு மறையுரை வழங்குபவர்: தேவக்கோட்டை தே பிரிட்டோ பள்ளி பாதிரியார் லெனின், மாலை 6:00 மணி.
* சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, மறைக்கல்வி மாணவர்கள் தினத்தை முன்னிட்டு திருப்பலி, காலை 6:30 மணி, நேர்ச்சை பொங்கல் வைத்தல், காலை 8:00 மணி, பாதிரியார் அலெக்ஸ் ஞானராஜ் வழங்கும் புதுநன்மை திருப்பலி, காலை 11:30 மணி, சூவன்ஸ்டார்ட் பாதிரியார்கள் வழங்கும் நற்கருணை பவனி திருப்பலி, மாலை 5:30 மணி.
* திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - சுவாமி வேதாந்த ஆனந்தா சரஸ்வதி, காலை 6:30 மணி, திருப்புகழ் இசை வழிபாடு, தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, சிறப்புரை: பேராசிரியர் சவுந்தரராஜன், மாலை 6:00 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
* மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை 22ம் ஆண்டுவிழா: ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் ஹால், கே.கே.நகர், மதுரை, தலைமை: பேரவை தலைவர் முத்தம்பெருமாள், முன்னிலை: பொதுச்செயலாளர் சந்திரசேகரன், ஆண்டு மலர் வெளியிடுபவர்: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில், பெற்றுக் கொள்பவர்: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன், சிறப்புரை: எம்.எல்.ஏ., ஆஸ்டின், விருதுநகர் மேலதாயில்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார், காலை 9:00 மணி.
* ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் மகேந்திர பாபு எழுதிய 'படிக்கும் காலம் பொற்காலம்', 'நேமிக்கம்' நுால்கள் வெளியீட்டு விழா: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: தேவகி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டாக்டர் நாகேந்திரன், சிறப்பு விருந்தினர்கள்: எழுத்தாளர் தருமன், கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் அறம், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சன்னாசி, கவிஞர் மூரா, 'ஆற்றல் ஆசிரியர்' மற்றும் 'சுடரொளி மகளிர்', விருது வழங்குதல், காலை 9:30 மணி முதல்.
* ஆசிரியர் தின விழா: பேர்டு நெஸ்ட் ஹோம் பார் சில்ட்ரன், மூன்றுமாவடி, தலைமை: பேராசிரியர் தீனதயாளன், சிறப்பு விருந்தினர்: லேடி டோக் கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி பொருளாதாரத் துறை முன்னாள் மாணவர்கள் சங்கம், காலை 10:00 மணி.
* ஆசிரியர் தின விழா - பேச்சுக்கலை பட்டறை: மதுரை திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: மதுரை இலக்கியப் பேரவை, சண்சரண் சமூகம் மற்றும் கல்விநல அறக்கட்டளை, காலை 10:30 மணி.
* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
* வைகை ஆன்கோ சம்மிட் 2026 - புற்றுநோய் தொடர்பான கருத்தரங்கம்: ஓட்டல் கோர்ட்யார்டு, மதுரை, பங்கேற்பு: புற்றுநோய் துறை நிபுணர்கள், ஏற்பாடு: வைகை கேன்சர் கேர், காலை 8:30 முதல் மாலை 4:30 மணி வரை.