Religion
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
போடி, செப். 9 - போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு
போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நடராஜர் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் உள்ள கைலாய மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.