நிழற்குடையை மறைத்து வைக்கும் பேனரால் அவதி
சித்தாமூர், செப். 16– புத்தின்கோட்டை பேருந்து நிறுத்தத்தை பேனர் வைத்து மறைப்பதால், பயணியர் கடும்
புத்தின்கோட்டை பேருந்து நிறுத்தத்தை பேனர் வைத்து மறைப்பதால், பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.
சித்தாமூர் அடுத்த புத்தின்கோட்டை கிராமத்தில் 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மதுராந்தகம் – வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
புத்திரன்கோட்டை, கல்பட்டு, சிறுநகர் உள்ளிட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை போன்ற பகுதிகளுக்கு செ ல்ல இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையின் முகப்பு பகுதியில், அரசியல் மற்றும் சுப நிகழ்ச்சி தொடர்பான பேனர்கள் அதிகளவில் வைக்கப்படுகின்றன. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். நிழற்குடையை மறைத்து வைக்கப்படும் பேனரால், பேருந்து வருவதை கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
நிழற்குடை இருந்தும் பேருந்துக்காக பயணியர் வெயிலில் காத்திருக்கின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நிழற்குடை முன் வைக்கப்பட்டு உள்ள பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.