Arts, culture, entertainment and media
காலி குடங்களுடன் சென்ற பெண்கள் பஞ்., யூனியன் அலுவலகத்தில் மனு

கரூர்:மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகத்தில், பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சென்று, போதிய குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன், பள்ளப்பாளையத்தில், அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள, குடிநீர் குழாய்கள் மூலம், சிலர் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை எடுக்கின்றனர். இதனால், மின் மோட்டார் வசதி இல்லாதவர்களுக்கு, போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, மின் மோட்டார் பயன்படுத்த தடை விதித்து, அனைவருக்கும் போதிய குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.