காஞ்சிபுரத்திற்கு புதிய டி.எஸ்.பி.,நியமனம்
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் காவல் கோட்டத்திற்கு, புதிதாக டி.எஸ்.பி., மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று காவல் கோட்டங்கள் உள்ளன. காஞ்சிபுரம் கோட்டத்திற்கான போலீஸ் டி.எஸ்.பி.,யாக சங்கர் கணேஷ், கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக, புதிய டி.எஸ்.பி.,யாக ஒரு மாதமாக யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.
உத்திரமேரூர் கோட்டம் டி.எஸ்.பி.,கேசவன் சமீப நாட்களாக கூடுதல் பொறுப்பில், காஞ்சிபுரம் கோட்டத்தையும் சேர்த்து கவனித்து வந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்திற்கான புதிய டி.எஸ்.பி.,யாக மணிவண்ணன் என்பவரை நியமித்து தமிழக டி.ஜி.பி.,மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
புதிய டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள மணிவண்ணன், இதற்கு முன், ஆவடி கமிஷனரகத்தில் உளவுப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்துள்ளார்.