ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழ்நாட்டில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக இன்னசென்ட் திவ்யாவும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி. ரவிக்குமார், வேளாண்மை உழவர் நலத்துறை இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக டி. மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையர் ஸ்ரேயா சிங், பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையராக ஞானதேவ் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இயக்குநர் ஜெயசீலன், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை இயக்குநராக ராஜ்கோபால் சுங்கரா, விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
