Lifestyle and human interest
ஏழாயிரம் பண்ணை , தாயில்பட்டியில் மின்வெட்டால் மக்கள் அவதி
சாத்துார், செப். 12- ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி சுற்று கிராமங்களில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத
ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி சுற்று கிராமங்களில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி, ஆலங்குளம், சங்கர பாண்டியாபுரம், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது.
மின்வெட்டிற்கான காரணம் குறித்து மின்சார வாரியத் துறை அதிகாரிகள் அறிவிக்காத நிலையில் தொடர்ந்து இரவு நேரத்தில் மின்வெட்டு செய்யப்படுவதால் இரவில் துாக்கம் இன்றி மாணவர்கள் , முதியவர்கள், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் 7:00 மணி முதல் 9:00 மணிவரையிலும் மின்வெட்டுசெய்யப்படுவதால் வியாபாரம் ,தீக்குச்சி தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்படுகின்றது.
தடையின்றி மின்சாரம் வழங்க மின்சார வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.