Lifestyle and human interest
தொடர் மின்வெட்டு.. கொந்தளித்த பொதுமக்கள்.. பல்வேறு இடங்களில் வெடித்த போராட்டம்.!

திருவள்ளூர் செங்குன்றம் அருகே சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறி தொழில் நிர்வாகிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர் மின்வெட்டை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் முதலியார்ப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தீப்பந்தங்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை, வடக்கு அரியாவூர் பகுதிகளிலும் தொடர் மின்வெட்டை கண்டித்து 2ஆவது நாளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் கடவூர் அருகே 10 நாட்களுக்கும் மேலாக 4 முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, திருவள்ளூர் செங்குன்றம் அருகே சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறி தொழில் நிர்வாகிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
